பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கால் புறம் இருக்க, மார்புக்கு முன் புறத்தில் கம்பினை குறுக்காக மாற்றி வைத்து நிற்றல்.

(அதாவது பிடித்திருக்கும் கீழுள்ள கை மேலுக்கு வர, மேல் கை கீழே வர)

3.முதல் எண்ணிக்கை போல வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

5. 1. கம்பினை கழுத்துக்குப் பின்புறமாக படுக்கை வாட்டில் பிடித்துக்கொண்டு, இடது காலை பின்புறமாக ஓரடி வைத்து நிற்கவும்.

2.தலைக்கு மேலே உயரமாக படுக்கை வாட்டில் கம்பினைப் பிடித்து, முன் பாதங்களில் நிற்கவும்.

3.முதல் எண்ணிக்கைக்கு வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

6. 1.தலைக்கு மேற்புறம் உயரமாக கம்பினைப் பிடித்துக் கொண்டு, இடது காலை இடது பக்கமாக ஓரடி எடுத்து வைத்து நிற்கவும்.

2.கழுத்துக்குப் பின்புறமாக (படுக்கை வாட்டில்) கம்பினைப் பிடித்து, முன்புறமாகக் குனிந்து நில்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.