பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


5. 6 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்கு

1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)

1.1. நடத்தல் ஓடல் (Walk and Run)

ஒரே வரிசையில் - நீண்ட கோடு போல மாணவர்களை நிற்க வைத்து, நடக்க விடுதல், ஓட விடுதல்.

வட்டமாக மாணவர்களை நிற்க வைத்து வட்டமாக நடக்கச்செய்தல், ஓட விடுதல்.

வரிசையாக நிற்க வைத்து, குறுக்கும் நெடுக்குமாக (Zig Zag) நடக்க செய்தல், மெதுவாக ஓட விடுதல், வேகமாக ஓட விடுதல்.

1.2. தாண்டச் செய்தல் (Jump)

இரு கால்களையும் சேர்த்து நிற்கச் செய்து, முன்புறமாகத் தாண்டி நிற்றல், தாண்டித் தாண்டிச் செல்லுதல் (Forward)