பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

263


ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும்

குழந்தைகள் நலவாழ்விற்கும். நல்ல தோற்றத்திற்கும் உதவுவன உடற்பயிற்சிகளும், விளையாட்டுக்களும் ஆகும்.

தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக சேர்ந்து செய்கிற பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும், குழந்தைகள் சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆகவே, இவை இரண்டும், செழிப்பு மிக்க அனுபவக் கல்வியறிவை வழங்கி உதவுகின்றன.

உடற்பயிற்சிகளும் விளையாட்டுக்களும் உடலைத் திறமாக்கி, மனதை பண்படுத்தி, மூளையை வளம் நிறைந்ததாக மாற்றி விடுவதால், பொதுக் கல்வி அறிவில் பெருமை பெறுகிற அளவு முன்னேற்றத்தையும் அளித்து விடுகின்றன.

மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளையே குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் வழங்குவதால், அவர்கள். வாழ்நாட்கள், வற்றாத இன்பச் சுனையாகவே மாறி விடுகின்றன.