பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

25


தாண்டி நின்ற இடத்திலிருந்து, அப்படியே பின்பக்கமாகத் தாண்டி நிற்றல். அப்படியே முன்போல, பின்புறமாகத் தாண்டித் தாண்டி வருதல் (Backward)

நின்ற இடத்திலிருந்து, அப்படியே பக்கவாட்டில், தாவித்தாவிச்செல்லுதல்

1.3. முன் பாதத்தால் (Sideward)

முன் பாதத்தால் நிற்க வேண்டும். முன் பாதங்களால் முதலில் நிற்க வேண்டும்.

நின்ற நிலையிலிருந்து, முன் பாதத்தால், முன்புறமாக, பக்கவாட்டில், பின்பக்கமாக நடத்தல்.

1.4 தடைதாண்டல் (Toes)

செங்கற்கள், அல்லது கட்டைகள் அல்லது சிறு சிறு பெட்டிகள், முக்காலிகள் போன்றவற்றை தடைகள் போல வழியில் நிறுத்தி வைத்து, தாண்டி ஓடுமாறு செய்தல்.

2. தாளலயப் பயிற்சிகள் (Rhythmics)

2.1. நாட்டியத்தில் பின்பற்றப்படுகிற நளினமான இயக்கங்கள், இந்தப் பயிற்சிகளில் இடம் பெற வேண்டும்.

நடத்தல், தாவுதல், தாண்டுதல், நடுதல், துள்ளிக் குதித்தல் போன்றவற்றைச் செய்யும் போது, இதமான தாளநயத்தோடு செய்தல்.