பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

27



8.கைவீசி அடித்தல்,நிறுத்தல் (Strike and dodge)

2.3 நடிப்புப் பாடல்கள் (Action Songs)

அறுவடை காலத்தில் பாடுகின்ற பாடல்கள்,

பால்காரிப் பாட்டு,

படகுப் பாட்டு

அந்தந்தக் கலாசாரத்தை இயல்பாக வெளிப்படுத்தும் பாடல்கள்.

முதலியவற்றைப் பாடி நடித்திட வேண்டும்.

3. பாவனை கதை நாடகங்கள், போலிக்குரல் எழுப்புதல் (Imitation, Mimicry)

3.1. போலியாக பாவனை செய்தல் (Imitation)

யானை, தவளை, முயல், சிங்கம், ரயில், மோட்டார் கார், துணி துவைப்பவன், ரிக்ஷாக்காரன், பந்து பிடித்தல், பந்து எறிதல், எஞ்சின் ஓடுதல் போன்றவற்றைப் போல, பாவனை செய்து காட்டுதல் (நடந்து காட்டுதல், ஓடிக்காட்டுதல்)

3.2 போலிக்குரல் எழுப்பல் (Mimicry)

குதிரை கனைப்பது போல, நாய் குரைப்பது போல; பூனை கத்துவது போல; வாத்து சத்தம் போல கரடி கத்துவது போல, யானை பிளிறுவது போல; குதிரை வண்டி ஒடும்போது உண்டாகும் சத்தம் போல; மாதா