பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கோயில் மணி அடிப்பது போல; வீதியில் பொருட்களை விலை கூறி விற்பவர் போல; பஸ் கிளம்பும் ஒலி போல; ரயில் ஒடும் சத்தம் போல, ஏரோப்ளேன் சத்தம் போல; போலியாகக் குரல் எழுப்பிக் காட்டுதல்.

4.சிறு பரப்பு விளையாட்டுக்கள் (Small area games)

இந்த விளையாட்டுக்களின் போது தான், சிறுவர் சிறுமியர்களின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.

சிறு பரப்பளவு உள்ள விளையாட்டிடத்தில், சிக்கலற்ற, சாதாரணமாக உள்ள விளையாட்டுக்களையே, விளையாடச் செய்ய வேண்டும்.

அப்படி நடத்துகிற விளையாட்டுக்களில், ஓடுதல், விரட்டுதல், தொடப்படாமல் தப்பித்துக் கொள்ளுதல் போன்றவை இடம் பெறுவது போல், அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட்டாக வேண்டும் என்கிற பெரிய விளையாட்டுக்களை கற்றுத் தருவதை, தவிர்த்து விடவும்.

முடிந்தால், வசதியிருந்தால், பந்துகள், அடித்தாடும் மட்டைகள், மற்றும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குழந்தைகளை விளையாடச்செய்யலாம்.