பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

29


குழந்தைகளை குழு குழுவாகப் பிரித்து, கூடி விளையாடச் செய்யவும். குழுவிற்கு 5 அல்லது 6 பேர் இருப்பது சிறப்பானதாகும்.

உங்களுக்கு உதவ, ஒரு சில விளையாட்டுக்களை விளக்கியிருக்கிறோம்.

4.1. எலியும் பூனையும் (Rat and Cat)

விளையாட வந்திருக்கும் சிறுவர்களை கோர்த்துக்கொண்டு வட்டமாக நிற்கச் செய்ய வேண்டும்.

அவர்களில் இருவரைத் தோந்தெடுத்து, ஒருவரை பூனையாகவும், இன்னொருவரை எலியாகவும் இருக்குமாறு கூறவேண்டும்.

ஆடுங்கள் என்று கூறியவுடன், பூனையாக இருப்பவள் எலியைத் தொடுவதற்காக முயற்சிக்க, எலியாக இருப்பவள், அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வட்டத்திற்கு உள்ளே புகுந்தும், வெளியே வந்தும் ஓடுவார். பூனையும் அவரை விரட்டித் தொட ஓடுவார்.

கைகோர்த்துக் கொண்டு நிற்பவர்கள், எலி வட்டத்திற்குள்ளே வரும் போதும், வெளியே போகும் போதும், கைகளை தாழ்த்தியும் உயர்த்தியும் வழி கொடுத்து உதவ வேண்டும். அதே சமயத்தில், பூனை வரும் போது வழி கொடுக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.