பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

33


தொடப்பட்டவர் அடுத்த தொடுபவராக மாற மீண்டும் ஆட்டம் தொடரும்.

குறிப்பு : சிலையாக நிற்பவர்கள், எந்த மாதிரி சிலையாக நிற்க வேண்டும் என்பதை ஆசிரியர் முன்னரே குறிப்பிட்டிருப்பதைத் தான் அனுசரித்து நிற்க வேண்டும். சிலை என்பது அசையாதது. குழந்தைகளும் அசையக் கூடாது என்பது தான் முக்கியம்.

4.4 வட்டத்திற்குள் ராஜா (King of Circle)

முதலில், குழந்தைகள் இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெரிய வட்டம் ஒன்று போட வேண்டும்.

விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகள், வட்டத்திற்குள்ளே, வந்த பிறகு, ஒரு காலை பின் புறமாக மடித்து வைத்துக் கொண்டு, ஒரு காலில் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, ஒரு காலில் நிற்கிற குழந்தைகள், மற்ற குழந்தைகளை இடித்து, வட்டத்திற்கு வெளியே தள்ளிவிட வேண்டும்.

வெளியே தள்ளப்பட்ட குழந்தைகள் ஆட்டமிழந்து விடுகின்றார்கள். கடைசியில் வட்டத்திற்குள்ளே நிற்கும் குழந்தையே, வட்டத்திற்குள்ளே ராஜா என்று, மற்றவர்கள் கைதட்டலுடன் பெருமையடைகிறது.