பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மீண்டும் பல முறை இது போல் ஆடச் செய்யலாம்.

குறிப்பு: எப்பொழுதும் குழந்தைகள் ஏதாவது ஒரு காலில் தான் நின்று கொண்டிருக்க வேண்டும். இடிபட்ட பிறகு தடுமாறி இருகால்களை ஊன்றினாலும், உடனே ஒரு காலில் நின்று விடவேண்டும். வட்டத்திற்கு வெளியே போய் விட்டால், மீண்டும் ஆட்டத்திற்குள் சேர்ந்து கொள்ள முடியாது.

4.5.தலைவரைப் பின்பற்று (Follow the leader)

வந்திருக்கும் குழந்தைகளில் ஒருவரை, தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் 'தலைவர்' குழந்தை, என்னென்ன பாவனை செய்கிறதோ, அதனைசெய்து கொண்டு பின்பற்றுகிற செயலே, தலைவரைப் பின்பற்று என்னும் ஆட்டமாகும்.

தலைவர் காக்கா பறப்பதைப் போல, இருபுறமும், கைகளை அசைத்தல், கொம்புடன் மாடு குனிந்து கொண்டு ஒடுவது போல, ரயில் எஞ்சின் ஒட்டம் போல, பல பாவனைகளுடன் முன்னால் ஒடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் தொடர்ந்து, அதே பாவனைகளுடன் ஒடிட வேண்டும்.

குறிப்பு : அடிக்கடி பாவனைகளை மாற்றிக் கொண்டு ஓடும் போது, ஆட்டத்தில் உற்சாகம் அதிகமாகும் என்பதால்,