பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வரும். கோழியும் குஞ்சுகளும் அங்கே நின்று போய் திரும்பி வந்தும், மீண்டும் மீண்டும் நேரம் என்ன என்று வந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் எல்லைக் கோட்டை அடைவதற்குள், எத்தனை பேரை நரி பிடிக்கிறதோ, அத்தனை பேர்களும், நரியின் சொந்தமாகிவிடுவார்கள். பிடிப்பட்ட குஞ்சுகள், நரி நிற்கும் எல்லைக் கோட்டின் பின்புறம் போய் நிற்க வேண்டும்.

மீண்டும் மற்ற குஞ்சுகளுடன் தாய்க் கோழி வந்து, நரியிடம் நேரம் கேட்க, ஆட்டம் தொடரும்.

ஒருவர் நரியாக 5 முறை ஆடுமாறு கூறி அதற்குள் எத்தனை குஞ்சுகளைப் பிடிக்கிறார் என்று கணக்கிட்டு வைத்துக் கொண்டு மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பளித்து, மிகுதியாக குஞ்சுகளைப் பிடித்த நரியாரையே, கெட்டிக்கார நரி என்று அறிவிக்க வேண்டும்.

இப்படியாக ஆட்டத்தை தொடரவேண்டும்.

4.7. மரம் தேடும் அணில் (Squirrel in a tree)

குழந்தைகளை மூவர் மூவராகப் பிரித்திட வேண்டும். ஒவ்வொரு மூவரும் ஒரு மரமாவர். அதாவது, இரண்டு பேர் கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்க, மத்தியிலே நிற்பவர் தான் அணில் கைகளைக் கோர்த்துக் கொண்டிருப்பவர்கள் மரம் ஆவர்.