பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

37


இப்படியாக, மூன்று பேர்கள் உள்ள குழுவை, மைதானத்தில் ஆங்காங்கே, நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

மரம் இல்லாத அணில்களாக, இரண்டு பேரை, மைதானத்தின் ஒரு மூலையில் போய் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆசிரியரின் விசில் ஒலிக்கு பிறகு, இருவருக்கு மத்தியில் அணிலாக நிற்கிற ஆட்டக்காரர்கள், தங்கள் இடத்தை விட்டு ஓடி, மற்ற மரத்தில் இடம் பிடிக்க வேண்டும். (கைகளுக்குள்)

இப்படி அணில்கள் இடம் மாறி மரம் பிடிக்கும் சமயத்தில், மரமில்லாத அணில்கள் இரண்டும், விரைவாக ஓடி, அணில் இல்லாத மரத்திற்குள் வந்து நின்று விட வேண்டும்.-

கடைசியில் இடம் கிடைக்காத அணில்கள், மூலையில் போய் நிற்க, மீண்டும் ஆட்டம் தொடரும்.

மரமாக நிற்பவர்கள், அசையாமல், ஓரிடத்தில் தான் நிற்க வேண்டும். அணிலாக இருப்பவர்கள் மட்டுமே, அங்கும் இங்கும் ஓடி மரம் தேட வேண்டும்.

மரம் கிடைக்காத அணில்கள், மீண்டும் தொடர்கிற ஆட்டத்தின் போது, இடம் தேடிக் கொள்ள வேண்டும். இதுவே ஆடும் முறையாகும்.