பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

39


இப்படியாக, இன்னொருவர் முதலையாக மாறிட, ஆட்டம் தொடரும்.

4.9. விரட்டித் தொடும் ஆட்டம் (Tag)

குழந்தைகளில் ஒருவரை விரட்டுபவராக (it) நியமிக்க வேண்டும். மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தான், எல்லோரும் ஓட வேண்டும் என்பதை, முதலிலே சொல்லி விட வேண்டும்.

ஆசிரியர் விசிலுக்குப் பிறகு, குழந்தைகள் ஒடிப்போக, அவர்களை விரட்டித் தொட, விரட்டுபவர் முயற்சிப்பார்.

தொடப்பட்டால், தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற. மீண்டும் ஆட்டம் தொடரும்.

இதை வேறு முறையிலும் விளையாடலாம்.

குழந்தைகள் விசில் ஒலிக்குப் பின் ஓடுகிற போது, விரட்டுபவர் ஒருவரைத் தொட்டவரோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் கை கோர்த்துக் கொண்டு, மற்றவரைத் தொட, அவரும் சேர்ந்து கொள்ள, இப்படியாக, தொடுபவர்கள் அணி பெரிதாகிக் கொண்டே போகும்.

கடைசியில் உள்ள ஒருவரைத் தொடும் வரை, இந்த ஆட்டம் தொடரும்.