பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


குறிப்பு : தொடுபவர் அணி, கைகோர்த்துக் கொண்டு தான் பிடிக்க வேண்டும். பிடியினை விட்டு விட்டுத் தொட்டால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சேர்ந்து கைப்பிடித்துக் கொண்டு, தொடும் போது தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.10 கண்மூடி ஆட்டம் (Blind Tribe)

குழந்தைகள் கைகளைக் கோர்க்காமல் தொடப்படுகிற அருகாமையில் நின்று கொண்டு, வட்டமாக நிற்க வேண்டும். அவர்கள் கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டும்.

வட்டத்தின் நடுவில், இரண்டு பேர், கால்களைத் துணியால் அல்லது கயிற்றால் கட்டிக்கொண்டு நிற்பர். அதாவது ஒருவரின் இடது காலும் மற்றவரின் வலது காலும் கட்டப்பட்டு, மூன்று கால்காரர்களாக (Three Legged) நிற்க வேண்டும்.

ஆசிரியரின் விசிலுக்குப் பிறகு, வட்டத்தில் நிற்பவர்கள் எச்சரிக்கையுடன் நிற்க; மூன்று கால் காரர்கள் இருவரும், வட்டத்தில் நிற்பவர்களால் தொடப்படாமல், வட்டத்திற்கு வெளியே வந்து விட வேண்டும்.

வட்டத்தில் நிற்பவர்கள், கண்களை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.