பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தசை நரம்புகள் சேர்ந்த சிறப்பான இயக்கம் அதிகமாவதுடன், உடலில் வலிமை, சமநிலை, நெகிழ்ச்சி ஏற்படவும், இந்த சீருடல் பயிற்சிகள் உதவுகின்றன.

5.1 பலவித இயக்கங்கள்

விசிலுக்குப் பிறகு, குழந்தைகள் ஒரு மூலையை நோக்கி ஓட வேண்டும்.

போய் நின்றதும், கைகளை சுழற்ற வேண்டும் (Swing)

முன் பாதங்களால் உயரமாக நிற்க வேண்டும். பிறகு, அப்படியே முன்பாதங்களால் குந்தியிருக்க வேண்டும். (Toes)

மரங்கள் கிளைகளைக் காற்றில் அசைப்பது போல, கைகளை விரித்து ஆட்டி அசைக்க வேண்டும்.

ஒரு காலில் நிற்க வேண்டும்.

தவளை தத்துவது போல தாண்ட வேண்டும்.

முன்புறமாகக் குட்டிக் கரணம் போட வேண்டும் (Forward Roll)

5.2. (ஒரு காலில்) நொண்டியடித்துக் கொண்டே, ஓடிக் கொண்டிருக்க வேண்டும். விசில் சத்தத்திற்குப் பிறகு, ஓடி வந்து வட்டமாக நிற்க வேண்டும்.