பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

45


6.2 கையை இழுத்தல் (Hand Pull)

முன்பு கூறியது போலவே (6 - 1) இருவரும் தங்கள் கைகளை முழங்கையால் ஊன்றியவாறு, உள்ளங்கைகளைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.

இழுங்கள் என்று கூறியவுடன், ஒருவரது கையை மற்றொருவர் தம் பக்கம் இழுத்துக் கொண்டு வருவது போல, இழுக்க வேண்டும்.

ஊன்றியுள்ள கையை இழுத்து, தரை மீது அல்லது மேசை மீது படுவது போல, படுக்க வைப்பவரே வெற்றி பெற்றவராகிறார்.

6.3 குச்சியை இழு (Wand Pull)

ஒரடி நீளம் உள்ள ஒரு குச்சியை, போட்டியிடும் இருவரும் இரு கைகளாலும், முதலில் பிடித்துக் கொள்ள வேண்டும்.