பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

முன்னுரை

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் என்று, இந்த நூலுக்குப் பெயர் தந்திருக்கிறேன்.

6 வயது முதல் 11 வயது குழந்தைகளுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். ஐந்திலே குழந்தைகளை வளைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது உறுப்புகளை செழிக்கத் தூண்டும்.

இந்தக் கருத்தில் தான் , ஐந்திலே வளையவேண்டும். இல்லாவிடில் ஐம்பதில் வளையாது என்று ஒரு பொன்மொழியை, நன்மொழியை, நமது முன்னோர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Catch them young என்பது நமது மாநில அரசின் , மைய அரசின் மகத்தானக் கொள்கையாக விளங்குகிறது. குழந்தைகளைப் பிடிக்க, பயிற்சியளிக்க, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வந்திருக்கின்றன.