பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

49


மொத்தம் 3 முறை இவ்வாறு இழுக்க விட்டு, அதில் 2 முறை வெற்றி பெறுகிறவரை, வென்றவர் என்ற அறிவிக்க வேண்டும்.

6.7 வாலை எடுபார்ப்போம் (Take off the tail)

போட்டியிடுகிற இருவரும், தங்கள் பின்புறத்தில் வால் போல ஒன்றை செருகிக் கொள்ள வேண்டும்.

கைக்குட்டை, அல்லது சிறு துணி, அல்லது சிறு கயிறு ஒன்றை பின்புறக் கால் சட்டையின் (இடுப்புப் பகுதியில்) நுழைத்துக் கொள்ள வேண்டும். அதையே வால் என்கிறோம்.

எடுங்கள் என்று ஆணையிட்டவுடன், இருவரும் தமது எதிரிக்குரிய வாலை பிடுங்க முயற்சிக்க வேண்டும். எதிரியின் வாலை எடுத்தவரே வெற்றி பெற்றவராவார்.

அடுத்தவர் வாலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, தன் வாலையும் இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

3 முறை இப்படி நடத்தி, அதில் இரண்டு முறை வெல்கிறவரை, வென்றவர் என்று அறிவிக்கலாம்.

6.8. குழிக்குள் தள்ளி விடு (Push into the pit)

5 அடி விட்டமுள்ள ஒரு வட்டத்தை முதலில் போட வேண்டும். அந்த வட்டத்தைத்தான் குழி என்கிறோம்.