பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

51


7.4. தான் வாழும் சூழ்நிலைக்கேற்ப, உடல் நலம் தரும் பழக்க வழக்கங்களை எப்படி கடைபிடிக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதுடன்; அவற்றைத் திறமையாகக் கடைப்பிடித்து ஒழுகவும் கூடிய உள்ள எழுச்சியும், திண்மையும் உண்டாகி விடுகிறது.

7.5 எதிலும் எப்பொழுதும் சுத்தமாக இருத்தல்; தேவையான உடற்பயிற்சி, வேண்டிய ஒய்வு, நல்ல தூக்கம், நிமிர்ந்து நிற்கிற பழக்கம், நிமிர்ந்து உட்காருதல், நடத்தல் போன்ற வற்றில் அக்கறை செலுத்தி, ஏற்றபடி நடந்து கொள்வதுடன், உணவுப் பழக்கத்திலும் தூய்மையான வழிகளை மேற்கொள்ள, உடல் நலக் கல்வி உதவுகிறது.

7.6 நோய் வந்த பிறகு தடுப்பதைவிட, வருவதற்கு முன்னே வளமாக வாழ்கிற, தற்காப்பு உணர்வையும் மிகுதியாக இது வளர்த்து விடுகிறது.

7.2. குழந்தைகளும் உடல் நலப் பழக்கங்களும்

7.2.1 தன்னுடல் சுகாதாரம் (Personal Hygiene)

தனிப்பட்ட ஒருவரின் உடலுக்குரிய நலம் பற்றி விளக்குவதுதான் , தன்னுடல் சுகாதாரம் என்று அழைக்கப்படுகிறது.

தினந்தோறும் பல் விளக்குதல்; மலம் கழித்தல்; குளித்தல்; தலைக்கு எண்ணெயிட்டு, முடிவாரி திருத்தம்