உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


செய்தல் ; வளர்ந்து வரும் நகங்களை வெட்டி அழகுப்படுத்தல், கைகால்களின் அழுக்கைக் கழுவி தூய்மையாக வைத்திருத்தல் போன்றவை எல்லாம், தன்னுடல் சுகாதாரப் பழக்கங்களாகும்.

இந்தப் பழக்கங்களை பாட்டாக இயற்றி, இசையமைத்து, கூடிச் சேர்ந்து பாடும் கூட்டுப் பாடலாகக் கற்றுத் தரலாம். பாடிக் கொண்டிருக்கும்போதே, அவற்றை நடித்துக் காட்டவும் செய்தால், குழந்தைகள் மனதிலே சுகாதாரக் கருத்துக்கள் ஆழப்பதிந்து விடும்.

உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல், தேகப்பயிற்சி; ஒய்வு, உல்லாசமான பொழுது போக்கு; உறக்கம் ; கைகால் உடல் துாய்மை இவற்றின் சிறப்புகளையும் குழந்தைகளுக்குப் போதிக்கலாம்.

உணவு உட்கொள்ளும் போது, அவசரமில்லாமல், நன்கு மென்று அரைத்து, சுவைத்துத் தான் விழுங்க வேண்டும். நல்ல உணவாக, வெந்த உணவாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிடவும். சாப்பிடுவதற்கு முன் கைகால் கழுவி சுத்தமாகிக் கொள்ள வேண்டும்.

ஓய்வும் உல்லாசப் பொழுது போக்கும் உடலுக்கு நல்ல தெளிவைக் கொடுத்து, களைப்பிலிருந்து மீளச் செய்து, களிப்பைத் தருவதாகும். அதனால், உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனமும் உற்சாகமடைகிறது.