பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


பந்தைத் தட்டித் துள்ளவிட்டு, மேலே வந்ததும், மீண்டும் தட்டுதல்.

பந்தைக் கையால் குத்தி, மேலே போகச் செய்தல்.

பந்தைத் தரையில் வேகமாக மோதி, அது மேலே போய் வரும் போது, தாவிப் பிடித்தல்.

பந்தை கையால் குத்தி மேலே போகவிட்டு, பிறகு பந்து கிழே விழுந்து, தரையில் மோதி மேலே எழும்போது பிடித்தல்.

ஒருவர் எறிகிற பந்தை, ஒரு கையால் பிடித்தல், முதலில் வலது கையால் பிடித்தல், பிறகு, இடது கையால் பிடித்தல்.

தூரமாக நிற்கிற ஒருவருக்குப் பந்தைத் தூக்கி எறிதல்.

அவ்வாறு மற்றவர் தனக்கு எறிகிற பந்தைப் பிடித்தல்.

பலூன் போல கனமில்லாத பந்தைக் காலால் உதைத்தல்.

பலூன் பந்தை, தலையில் மோதித் தள்ளுதல்.

2. தாள லயப் பயிற்சிகள் (Rhythmic Exercises)

தாளலயப் பயிற்சிகளும், செயல் முறைகளும், நல்ல நெகிழ்ச்சி நிறைந்த உடலமைப்பை வளர்த்து விடுகின்றன. சமநிலையான (Balance) இயக்கமும், அந்த ஒவ்வொரு