பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3.1 பாவனைகள் (Imitations):

6 முதல் 8 வயதுக் காரர்களுக்கு கற்பித்த - யானை, தவளை, முயல், சிங்கம், ரயில், மோட்டார் கார், துணி துவைப்போர், ரிக்ஷாக்காரன், போன்ற பாவனைகளை மீண்டும் கற்பித்திட வேண்டும்.

பிச்சைக்காரன், வயதான கிழவன் கிழவி; சிப்பாய் அல்லது இராணுவ வீரன்; டாக்டர் போன்றவர்களின் நடை உடை பாவனைகள்;

எருமை, குரங்கு, படகு தள்ளுதல் போன்று பாவனைகளைக் கற்பிக்கவும்.

3.2. போலிக்குரல் எழுப்புதல் (Mimetics)

குதிரை கனைத்தல், நாய் குரைத்தல், பூனைக் கத்தல், வாத்துச்சத்தம், கரடிக் கத்தல், யானை பிளிறல், குதிரை வண்டி ஒடும் சத்தம், மாதா கோயில் மணி அடித்தல், வீதியில் விலை கூறி விற்பவர் போல குரல் எழுப்புவதை நினைவுகொள்க.

இனி, புதிய போலிக் குரல்களையும் போதிக்கவும். பறவைகள் போல; கரடி, ஒட்டகம், ஆட்டுக்குட்டி, சிங்கம், மாவரைக்கும் எந்திரம், பஸ், மோட்டாள் காள், போன்றவையின் ஒலியை பிரதிபலிக்கும் போலிக் குரல்களைப் பயிற்றுவிக்கவும்.