பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


ஆசிரியர் விசில் மூலம் சைகை கொடுத்தவுடன் எல்லா மாணவர்களும் முன்பு காட்டிய பாவனையுடன் சிலை போல நிற்க வேண்டும். சிலைபோல் நிற்க இயலாமல் தடுமாறுகிறவராகப் பார்த்து, பாவனை காட்டியவர் தொட முயல்வார்.

அவ்வாறு யார் தொடப்படுகிறாரோ, அவரே அடுத்த தொடுபவராக மாற வேண்டும். அவர் ஒரு புதிய பாவனையைக் காட்டிட, மற்றவர்கள் பின்பற்ற, அவர் தொட முயல, ஆட்டம் இப்படியே தொடரும்.

4.2. நிழலாட்டம் (Shadow Tag)

நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்போது தான் இந்த ஆட்டத்தை ஆட வேண்டும்.

ஆட்டக்காரர்களில் ശെഖബ. விரட்டித் தொடுபவராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்குகிறது. விரட்டித் தொடுபவர், இதில் ஆளை ஒடிப் போய் தொடக்கூடாது.

ஓடுபவர்களின் நிழலைத்தான் விரட்டி மிதிக்க வேண்டும். தப்பி ஓடுபவர்களில், யாருடைய நிழல் 'அவரால்' மிதிக்கப்படுகிறதோ, அவரே அடுத்த விரட்டுபவராக மாற, ஆட்டம் மீண்டும் தொடரும்.

தப்பி ஒடுவோர்கள் நிழல் எங்கு, எவ்வளவு தூரம் விழுகிறது என்பதை அறிந்து கொண்டு, உடலை முறுக்கி,