பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

63


வளைத்து, குனிந்து நிழலைக் குறைத்தும் மாற்றியும் ஆடினால், ஆடுவோருக்கும் காண்பவருக்கும் ஆட்டம் கவர்ச்சியாகத் தோன்றும்.

4.3. தொடு பார்க்கலாம் (Object tag)

விளையாட வந்திருப்பவர்களில் ஒருவரை 'அவராகத்' (it) தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.

விரட்டித் தொடுபவர் தொட வந்தால் ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்பதாகத் தீர்மானித்து, முதலிலேயே மாணவர்களுக்குச் சொல்லி விட வேண்டும்.

ஆசிரியரின் விசில் ஒலிக்குப்பிறகு, குழந்தைகளை விரட்டித் தொடுபவர் தொட முயற்சிப்பார். அவரிடம் தொடப்படாமல் இருப்பதற்காக குழந்தைகளும் ஒடுவாள்கள்.

இனி வேகமாகவும் ஓட முடியாது. தொடுபவரிடம் தப்பிக்கவும் முடியாது என்ற நிலை வருகிற போது, முன்னர் கூறிய பொருள் ஒன்றைத் தொட்டுக் கொண்டு நின்றால், தொடுபவர் தொடாமல் விட்டுவிடுவார். ஓடியவரும் தப்பித்துக்கொள்வார்.

தப்பி ஓட முடியாமலும், பொருளைத் தொடாமலும் இருப்பவர் தொடப்பட அவர் அடுத்த விரட்டுபவராக மாற, ஆட்டம் தொடரும்.