பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எலியாக இருப்பவர், தன் இருப்பிடத்தைக் குறிப்பதற்காக, ஏதாவது சத்தம் செய்யலாம். பூனையானவள், அந்த சத்தத்தைக் கேட்டு எலியைப் போய் பிடிக்க வேண்டும்.

எலியைப் பிடித்தால் பூனை வென்றது. இல்லையென்றால் பூனை தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு, வேறு இருவர் தோந்தெடுக்கப்பட, விளையாட்டு மீண்டும் தொடரும்.

5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

முன்னர் கற்றுத்தந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளைத் தொடர்ந்து, பின்வரும் பயிற்சிகளைப் போதிக்கவும்.

5.1 முயல் குதிப்பது போல, குதித்து நிற்கும் பாவனை.

முயல் போல சரியாகக் குதித்து நின்று உட்காருதல் (Sitting);

அப்படியே எழுந்து நிற்றல் (Standing)

முன்புறமாக வளைந்து கொள்ளுதல் (Folding)

அப்படியே முன்புறமாக கைகளை நீட்டிவிடுதல். (Stretching)

5.2 இரண்டு கால்களையும் அகலமாக விரித்து வைத்து, முதலில் நிற்க வேண்டும்.