பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

67


விசில் அடித்தவுடன், அகலமாக இருந்தபடியே, அப்படியே முன்புறமாகக் குதித்து, அசையாமல் உட்காரவும். பிறகு எழுந்து நின்று, மீண்டும் முன்புறமாகக் குதித்து உட்காரவும்.

முடிந்தால், பின்புறமாகக் குதித்து வந்து உட்காரவும்.

5.3. முன்புறக் குட்டிக் கரணம் (Forward Roll)

a. படத்தில் உள்ளது போல முதலில் உட்காரவும்.

b. கைகளை தரையில் ஊன்றி, அவற்றின் நடுவில் தலையை ஊன்ற வேண்டும்.

C. உடலை முன்புறமாகத் தள்ளி, முதுகுப்புறம் தரையில் படுவது போல, விழவும். (தலை தரையில் படக் கூடாது)

d. குட்டிக்கரணம் அடித்து மேலே வரும் பொழுது, இரண்டு கைகளாலும், கணுக்கால்களை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளவும்.

e. சரியான சமநிலைக்கு வருகிற வரையில், காலைப் பிடித்திருக்கும் இறுக்கத்தை விடாமல், பிடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: கால்களை அகலமாக வைத்திருப்பதுடன், குதிகால்கள் பின்புறப்பகுதிக்கு (Buttocks) பக்கமாக இருப்பது போல் வைத்துக்கொள்ளவும்.