பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

73


குறிப்பு: எந்தக் காரணத்தைக் கொண்டும், கணுக்கால்களைப் பிடித்துள்ள பிடியை, விட்டு விடவே கூடாது. கணுக்கால்களைப் பற்றிப் பிடித்தபடி தான், சண்டை போட வேண்டும்.

6.2 கோழிச் சண்டை (Cock Fight)

இரண்டு கோழிகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டு, 5 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றையும் போட்டு வைக்கவும்.

கோழியாக இருக்கும் இருவரும், காலை உயர்த்திக் கொண்டு ஒரு காலில் நின்று, பின் புறமாகக் கைகளை முதுகுப்புறத்துக்கு கொண்டு போய், ஒரு உள்ளங்கையால் மற்ற கையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்துக்கொண்டு நிற்கவும்.

இது தான், கோழியாக நிற்கும் முறை.

சண்டையிடுங்கள் என்று கூறியவுடன், இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும். சண்டையிடுகிற போது, ஒற்றைக் காலுடன், முதுகுப்புறம் கட்டிக் கொண்ட கைகளுடன் தான் போட்டியிட வேண்டும்.

சண்டையின் நோக்கம், எதிராளியை வட்டத்திற்கு வெளியே போகுமாறு இடித்துத் தள்ள வேண்டும்.