பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

77


சைகை கிடைத்து சண்டை ஆரம்பமானதும், எதிராளி இருவரும் தோள்களின் பிடியை விட்டு விடாமல், எதிரியை முன்புறமாகத் தள்ளலாம். ஒருவரை ஒருவர் சுழற்றி விடலாம். பக்கவாட்டில் தள்ளலாம்.

இந்தப் போட்டியின் போது, நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் கரளா கட்டையை வீழ்த்தி விடாமல் இருக்க வேண்டும்.

யார் அந்தக் கரளாக் கட்டையின் மேல் மோதி, கீழே விழுமாறு வீழ்த்தி விடுகிறாரோ, அவர் தோற்றவராகி விடுகிறார்.

தடுமாறி கால்களினால் கட்டையை வீழ்த்துவது போல, எதிரியை இழுத்து மடக்கித் தள்ளும் போட்டியாளரே வெற்றி பெற முடியும் என்பதால், இந்த நோக்கத்தோடு எதிரியுடன் சண்டைபோட வேண்டும்.

7. உடல் நலம் (Health)

7.1. தன்னுடல் சுகாதாரம்

பல் துலக்குதல், சரியாக முடி வாருதல், கைகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், நகம் வெட்டி நன்றாக வைத்திருத்தல் போன்றவற்றை, முன் கற்றுத் தந்தோம்.