பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

79


காலையில் பிறகு உடம்பைத் துடைக் கப் பயன்படுகிற துண்டானது சுத்தமாக இருக்க வேண்டும். துவைத்த சுத்தமான ஆடைகளையே, குளித்த பிறகு அணிந்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்தவுடன், மலம் கழிக்கும் பழக்கத்தை வற்புறுத்திக் கற்றுத்தர வேண்டும். முறையாக மலம் கழிக்காவிட்டால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளையும், மலச்சிக்கல் ஏற்பட்டு, உடல் நலம் கெட்டுப் போகும் என்பதையும் விளக்கி, காலையில் எழுந்ததும் காலைக் கடனை நிறைவேற்றுகிற காரியத்தையே முதலில் செய்து முடிக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல வேண்டும்.

மலம் சரியாகக் கழிக்காவிட்டால், உடல் மந்தப்பட்டுப் போவதுடன், மனநிலையிலும் எழுச்சியில்லாமல் போய், கற்கவும், ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கூறி, அவர்களின் தன்னுடல் சுகாதாரப் பழக்க வழக்கங்களில் தினசரி கவனம் செலுத்தியாக வேண்டும்.

7.2 சுற்றுப்புறச் சுகாதாரம் (Environmental Hygiene)

நாம் வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் பகுதியையே, சுற்றுப்புறம் என்கிறோம்.

சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகள் சுகாதாரமாக இருந்தால், அது எல்லோருக்கும் சுகம் அளிப்பதாக