பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

81


7.3. பாதுகாப்பு விதிமுறைகள் (Safety Rules)

7.3.1. வீட்டில் பாதுகாப்பு முறைகள்

வீட்டிலே நிகழும் விபத்துக்களை, மூன்று வகையாகப் பிரிக்கலாம். வழுக்கி விழுதல்; எதிலாவது மோதி இடறி விழுதல், தீக்காயம் படுதல்.

தனக்கு எட்டாத பொருளை எடுக்க முயன்று நிலை மாறி விழுதல்.

ஏணியில் ஏறி இறங்கும் பொழுது தடுமாறி விடுதல்.

மாடிப்படியில் ஏறி இறங்கும்போது வழுக்கி விழுதல்.

தண்ணீர் தரையில் நடக்கும்போது சறுக்கி விழுதல்.

வீட்டில் கோணி, பாய் மாட்டிக் கொண்டு, அவசரத்தில் விழுதல்.

தூக்க முடியாத சுமையைத் தூக்கி, தடுமாறி விழுதல்.

அதுபோலவே, குளியலறையில் பாசி படிந்த தரையில் வழுக்கி விழுதல்.

தீயிடம் கவனமாக இருக்காது, அசட்டைத்தனம் செய்து, அகப்பட்டுக்கொண்டு காயம் படுதல்.