பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


ஸ்டவ் எரியும் போது, கவிழ்ந்து தீக்காயம் அடைதல்.

குழந்தைகள் தீப்பெட்டியுடன் விளையாடும் போது தீ விபத்து ஏற்படுதல்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையெல்லாம் விளக்கி, பாதுகாப்புடன் வாழச் செய்யுமாறு, குழந்தைகளை எச்சரிக்கை செய்து, வழிகாட்ட வேண்டும்.

7.3.2. சாலைகளில் பாதுகாப்பு (Roads)

சாலைகளில் நடக்கும் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள், கவனமின்மை, அவசரம், தனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம்.

எச்சரிக்கையுடன் நடந்து சென்றாலும், வாகனத்தை ஓட்டினாலும், சாலைகளில் விபத்து நேராமல் காத்துக் கொள்ளலாம்.

சாலைகளில் நடந்து செல்லும் போது, இடது பக்கமாக நடைபாதையிலே நடந்து செல்லுதல்.

சாலையைக் கடக்கும்போது, போலீஸ்காரர் காட்டும் சைகையின்படி நடந்து கொள்ளுதல்.

கற்பனையோ கனவோ காணாமல், பாதையைப் பார்த்து நடத்தல்.