பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

83


நண்பர்களுடன் போகும் போது, அரட்டை அடிக்காமல், பாதையில் முன்னும் பின்னும் வருபவர்களைப் பார்த்து, எச்சரிக்கையுடன் நடத்தல்.

ஓடுகின்ற கார்களை, வண்டிகளைத் தொடக்கூடாது.

சாலையில் விளக்கு எரியும் நேரம் பாத்துக் கடத்தல்.

சாலையின் குறுக்கே போகும் போது, அவசரப்படாமல், ஓடாமல், பதட்டப்படாமல், சுற்றும் முற்றும் பார்த்து நடத்தல்

அதுபோல; சைக்கிளில் செல்வோரும் எச்சரிக்கையாகப் போக வேண்டும்.

7.3.3. ஆடுகளங்களில் பாதுகாப்பு (Playgrounds)

ஆடுகளங்களில் பள்ளம் மேடு இருக்கும். பார்த்து விளையாட வேண்டும்.

கண்ணாடித் துண்டுகள், முட்கள், கற்கள், கூரிய கட்டைகள் கிடந்தால், அவற்றை எடுத்து வெளியே எறிந்துவிட வேண்டும். அவை கிடந்தால், நமக்கென்ன என்று இருக்கக்கூடாது.

பெரியவர்கள் ஆடுகின்ற விளையாட்டையெல்லாம் சிறுவர்கள் ஆடக்கூடாது. குழந்தைகளால் என்ன முடியுமோ, அந்த விளையாட்டைத் தான் ஆடவேண்டும்.

பெரியத் தனமாக விளையாட்டையெல்லாம் ஆடக்கூடாது.