பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

85


என்பதையெல்லாம், ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு நன்குக் கற்பித்துவிட வேண்டும்.

7.3.5. புகையும் பகையும்

புகையிலையை உபயோகப்படுத்துவது, சிகரட் புகைப்பது எல்லாம், உடலுக்குக் கேடு தரும் என்பதை, குழந்தைகளுக்கு கட்டாயமாக சொல்லித் தர வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் ஒரு புறத்தில் ஒரு சிகரெட்டை வைத்து, மறுபுறத்தில் பஞ்சை வைத்து அடைத்துவிட்டு; சிகரெட்டைக் கொளுத்திப் புகைக்க வைத்துவிட்டால், அதிலிருந்து வரும் புகை பஞ்சில் பட, அதில் நிகோடின் என்ற கொடிய சத்து, மஞ்சள் வடிவத்தில் பதிந்திருப்பதைக் காட்டி, அந்த நிகோடின் உடலுக்கு எப்படியெல்லாம் கெடுதல் செய்கிறது என்பதைக் (பரிசோதனை மூலமாக) காட்ட வேண்டும்.

குறிப்பு: சிகரெட் புகைய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்கள் சிகரெட்டை வாயில் வைத்து, புகைத்துக் காட்டக்கூடாது.

புகைத்தல் பொல்லாங்கு விளைவிக்கும் என்ற கருத்தை, அவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.