பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


7. 9 முதல் 10 வயது குழந்தைகளுக்கு


1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)

நடை ஒட்டம் தாண்டல், எறிதல் போன்ற செயல்களை அதிகம் கற்பித்து கைகளுக்கும் கால்களுக்கும் வலிமை கூடவும், திறன்களில் நுண்மை பெருகவும் ஆசிரியர்கள் உதவ வேண்டும். பெற்றோர்களும் பெருமை தரத்தக்க அளவில் துணை புரிய வேண்டும்.

ஓட்டம் தாண்டலுக்குரிய பயிற்சி முறைகள் :

பக்கவாட்டில் ஓடிக்கொண்டே, அங்கிருக்கும் சிறு தடையைத் தாண்டித் தூரமாகக் குதித்தல், (Sideways jump)

1 முதல் 2 அடி உயரமாக ஒரு சிறு கயிற்றைப் பிடிக்கச் செய்து, அதை ஒடி வந்து தாண்டுமாறு செய்தல் (Straightjump)