பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

87


ஒரு கயிற்றைப் பிடிப்பது போல, சற்று தூரம் துரமாக இன்னும் இரண்டு கயிறுகளை அதே உயரத்திற்குப் பிடிக்கச் செய்து, நீளத் தாண்டல் போல ஓடி வந்து, தாண்டுமாறு செய்தல்.

இவ்வாறு 1 அடி அல்லது 2 அடி உயரமாகக் கயிற்றைப் பிடிக்க செய்து, நின்ற இடத்திலிருந்தே தாண்டி - முழங்கால் மடிய நின்று, பிறகு நிமிர்ந்து நிற்றல். (Standing jump)

வேகமாக ஓடி வந்து, உயரமான அந்த தடையை தாண்டி, அதன் பக்கத்தில் போட்டிருக்கும் வட்டத்திற்கு உள்ளேயே நிற்றல்.

நீளத் தாண்டுதல் போலவே, இரண்டு முறை தாண்டித் தாண்டிக் குதித்து நிற்றல்.

ஓரடி இடைவெளி இருப்பது போல, நான்கு வட்டங்களைப் போட்டு, அதில் ஒவ்வொன்றாகக் குதித்துக் குதித்துப் போகுமாறு செய்தல்.

ஒரு காலை மடித்து ஒரு காலில் நின்று. தாவி ஒரு பொருள் மீது குதித்து, அதை ஒரு காலிலேயே செதுக்கிப் போகச் செய்து, அதன் மேலே மீண்டும் நின்று ஆடுதல் (கிராமப்புறங்களில் குழந்தைகள் ஆடும் செல் செதுக்கி ஆடுகிற ஆட்டம்.)