பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


ஒரு வாளியை 3 அடி துரத்திற்கு அப்பால் வைத்து, அதற்குள் பந்து விழுமாறு, குறிபார்த்து எறிதல்.

பந்தை உதைத்தல், பந்துடன் ஓடுதல்,
தலையாலிடித்தல் போன்ற பயிற்சிகள்

பந்தை நேராக உதைத்தல், வேகமாக உதைத்தல், வட்டத்தில் ஓரிடத்தில் போய் படுமாறு குறி பார்த்து உதைத்தல். இடைவெளிக்குள், எதிலும் பந்து படாதவாறு உதைத்தல்

அதுபோல, பந்தைக் காலால் உருட்டிக் கொண்டே (Dribbling)ஓடுதல். இருக்கும் தடைகளைச் சுற்றிச் சுற்றி, பந்தைக் காலால் உருட்டிக் கொண்டே ஓடுதல்.

எதிரில் ஒருவரை நிற்கச் செய்து, அவரைச் சுற்றிச் சுற்றி, பந்தை உருட்டிப் பயிற்சி செய்தல்.

டென்னிஸ் பந்தை உயரமாகப் போட்டு, தலையாலிடித்துத் தள்ளுதல் (Heading).

2. தாள லயப் பயிற்சிகள் (Rhythmic)

சேர்ந்து ஆடும் குழு நடனங்கள்

அந்தந்த மாநிலத்தின் கிராமிய நடனங்கள்

கொடிப் பயிற்சிகள் (Flag drills)