பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


வந்திருக்கும் குழந்தைகளை இரண்டு குழுவாக முதலில் பிரித்து நிறுத்த வேண்டும்.

15 கெஜம் விட்டமுள்ள ஒரு வட்டம் 25 கெஜம் விட்ட முள்ள இன்னொரு வட்டம். உள்ளே ஒரு வட்டம். அதைச் சுற்றி பெரிய வட்டம். இப்படி ஒன்றைச் சுற்றி ஒன்றாகப் போட்டிருக்கவேண்டும்.

ஒரு குழுவினர் விரட்டித் தொடுபவராக (Chasers) மாறி, 15 கெஜ விட்ட வட்டத்தின் உட்புறத்தில், வட்டத்தை சுற்றி, கோ கோ பாணியில் உட்கார்ந்திருக்க வேண்டும். அதாவது ஒருவர் உட்புறமாக, மற்றொருவர் வெளிப்புறமாகப் பார்த்திருப்பது போல அமரவும். அமருகின்ற இடம் குறைந்தது 5 முதல் 6 அடி இடைவெளி தூரம் இருக்க வேண்டும்.

தொடப்படாமல் ஓட இருக்கின்ற குழு (Runners) 25 கெஜ விட்டமுள்ள வட்டத்திற்குள்ளாக, எங்கு வேண்டுமானாலும் நின்று கொண்டிருக்கலாம்.

சைகை கிடைத்தவுடன், விரட்டும் குழுவில் உள்ள ஒருவர், அந்த சிறு வட்டத்தை ஒரு சுற்று சுற்றி (Round) வந்து, வட்டத்தின் உட்புறமாகப் பார்த்திருக்கும் ஒருவருக்கு 'கோ' கொடுக்க வேண்டும்.