பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

93


கோ பெற்ற புதிய விரட்டுபவர், சிறிய வட்டத்திற்குள்ளே நின்று கொண்டிருப்பவர்களை மட்டுமே தொட முயல வேண்டும்.

வெளி வட்டத்திற்குள், ஓடுபவர்கள் நின்று கொண்டிருந்தால், வெளிப்புறமாக வந்து அவர்களைத் தொடக்கூடாது. ஆகவே வட்டத்தின் வெளிப்புறமாகப் பார்த்து அமர்ந்திருப்பவருக்கு அவர் கோ கொடுத்து விட்டு, அமர்ந்து கொள்ள வேண்டும்.

அப்படி கோ பெற்ற விரட்டுபவர். உள் வட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கும். ஆட்டக்காரர்களை மட்டுமே தொட வேண்டும்.

விரட்டுபவர்கள், எதிர்க் குழுவினர் அனைவரையும் எத்தனை நிமிடத்திற்குள் தொட்டர்கள் என்று கணக்கிட்டுக் கொண்டு, மற்றக்குழு எத்தனை நிமிடங்களில் தொட்டது என்று சரிபார்த்து, குறைந்த நேரத்தில் தொட்டு வெளியேற்றிய குழுவையே, வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

2. கோட்டில் குறுக்கு நெடுக்காக ஓடுதல் (Line kho kho)

விளையாட வந்திருப்பவர்களை, இரண்டு குழுவாக, முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.