பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


தடுப்பவர்களாக இருந்தாலும், தாக்கி ஆடுபவர்களாக இருந்தாலும், யாரும் அந்த வட்டத்திற்குள்ளே போகக் கூடாது. வட்டத்திற்கு வெளியேயிருந்து தான் பந்தை உதைத்து, கட்டைகளை வீழ்த்த வேண்டும்.

ஒரு முறை எதிரி கரளா கட்டைளை வீழ்த்துகிற குழு, 1 வெற்றி எண்ணைப் பெறுகிறது.

5 நிமிட இடைவெளி விட்டு, 20 நிமிடங்கள் ஆடிய பிறகு, எந்தக் குழு அதிக வெற்றி எண்களைப் பெற்றிருக்கிறதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்ற தாகும்.

2. வட்டக் கால் பந்தாட்டம் (Circle Foot Ball)

இரண்டு குழுவாக விளையாட வந்தவர்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

20 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும், அதைச் சுற்றி 25 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும் போட்டிருக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு மையக் கோட்டை இழுத்து, இரண்டு பகுதிகளாக ஆடுகளத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு குழுவிற்கும் உள் வட்டம், வெளி வட்டம் என்ற இரண்டு அரை வட்டங்கள், ஆடும் இடமாக அமைந்திருக்கின்றன.