பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

வைரஸ்


வைரஸ்

புகையிலைச் செடியைத் தாக்கும் வைரஸ்
தக்காளிச் செடியைத் தாக்கும் வைரஸ்
இளம்பிள்ளைவாதத்தை
உண்டாக்கும் வைரஸ்

பல ஆண்டுகள் வரை வைரஸ்களை பாக்ட்டீரியத்துக்கு உறவுடைய ஒரு வகை ஒட்டுண்ணி (த.க.) எனக் கருதி வந்தார்கள். ஆனால், அளவிலும் அமைப் பிலும் இவை பாக்ட்டீரியத்திலிருந்து மாறுபட்டவையெனத் தெரிய வந்திருக் கிறது. இது ஒரு படிகம்போல் காணப் படுகிறது. இதற்கு ஓர் உட்கரு (Nucleus) உண்டு. அது நியூக்ளிக அமிலத்தினால் (Nuclic acid) ஆனது. இந்த உட்கருவைப் புரதப் படலம் ஒன்று உறைபோல் மூடி இருக்கிறது. சில தாவர வைரஸ்களும், வேறு சில விலங்கு வைரஸ்களும் கோள வடிவில் உள்ளன ; புகையிலைக்கும் தக்காளிக்கும் நோய் உண்டாக்கும் சில வைரஸ்கள் குச்சி வடிவில் அமைந் துள்ளன; வேறு சில தலைப்பிரட்டை வடிவில் இருக்கின்றன. வைரஸ்கள் உருவில் மிக நுண்ணி யவையாயினும், அவற்றால் உண்டாகும் கேடு மிகப் பெரிது. வாய், மூக்கு, காது, திறந்த புண்கள் வழியாக இவை உடலுக் குள் நுழைகின்றன. உடனே உயிரணுவின் சுவரை ஊடுருவி உள் நுழைகின்றன; உயிரணுவினுள் உள்ள உயிர்ப்பொருள் களை உறிஞ்சிக்கொண்டு பல்லாயிரக் கணக்கில் பெருகுகின்றன. இதனால் உயிரணு முற்றிலும் அழிந்துவிடுகிறது. பலவாகப் பெருகிய வைரஸ்கள், செய லற்றுப்போன உயிரணுவின் சுவரைப் பிளந்து கொண்டு வெளியேறி, மற்ற உயிரணுக்களினுள் நுழைந்து பரவு கின்றன. அப்பொழுது நோய்க் குறிகள் தோன்றத் தொடங்கும்.

வைரஸ் கிருமிகளினால் மனிதருக்கு இளம்பிள்ளைவாதம், தடுமன் (சளி), அம்மை, கிளிக்காய்ச்சல், மஞ்சள் காய்ச் சல், கக்குவான், கண்ணிமை அரிப்பு (Trachoma) முதலிய நோய்கள் உண்டா கின்றன. பன்றிக்காலரா, பன்றிக் காய்ச்சல், வெறிபிடித்தல், கால்-வாய் நோய் (கோமாரி) முதலியவை விலங்கு களுக்கு உண்டாகின்றன. தாவரங்களில் தக்காளி, புகையிலை முதலியவற்றுக்கு மூசை நோய், இலைச்சுருட்டை நோய், செடிசுருள் நோய் முதலியவை உண்டா கின்றன. பாக்ட்டீரியங்களையும் சிலவகை வைரஸ்கள் தாக்குகின்றன.

வைரஸ்களை ஒழிக்கப் பலவகை மருந்து கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எந்த மருந்தும் முழு வெற்றி தருவதாக இல்லை. எனினும், அம்மை நோய், மஞ்சள் காய்ச்சல் போன்ற சில நோய்களை வைரஸ்கள் பரப்பாமல் தடுக்க அண்மையில் வழி கண்டுள்ளனர். பார்க்க : இளம்பிள்ளைவாதம்; நோய்க்கிருமிகள்.