பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சந்திரனின் கவர்ச்சி, பூமியின் கவர்ச்சியில் ஆறில் ஒரு பங்குதான் உள்ளது. குறைந்த கவர்ச்சியுள்ள சந்திரன் மேல் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை ஓர் அமெரிக்க விண்வெளி வீரர் சோதனைக்கூடத்தில் பழகுகிறார். இந்த சோதனைக்கூடத்திலுள்ள புவிக்கவர்ச்சி யின் அளவு, சந்திரன் கவர்ச்சியளவுக்குச் செயற்கை முறையில் குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை 20-ல் சந்திரனில் தரை யிறங் கியது. முதலில் ஆர்ம்ஸ்டிராங்கும், அடுத்து ஆல்டிரினும் சந்திரனில் அடி யெடுத்துவைத்து, சுமார் 22 மணி நேரம் தங்கிப் பல பரிசோதனைகளை நடத்தினார்கள். ஆய்வுகளை நடத்திய பின்னர் இரு வரும் மீண்டும் பழையபடியே சந்திரன் கூட்டில் ஏறி அமர்ந்தார்கள்; ராக்கெட்டு லா வளிப் பயணம் விசையால் மேலேறி, அங்கு சுற்றுப் பாதையில் காலின்ஸுடன் வலம் வந்து கொண்டிருந்த ஆணைக்கூட்டை நெருங்கி, அதனுடன் தம் கூட்டை இணைத்துக் கொண்டார்கள். இணைப்பு ஏற்பட்டதும் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டிரின், இருவரும் சந்திரன் கூட்டைக் கைவிட்டு, ஆணைக் கூட்டினுள் ஏறிக்கொண்டார்கள். பிறகு சந்திரன் கூடு ஆணைக்கூட்டினின்றும் கழன்று தனியாகச் சந்திரனைச் சுற்றி யோடத் தொடங்கியது. ஆணைக்கூட்டை மட்டும் கொண்ட அப்பாலோ விண் வெளிக்கலம் தன் ராக்கெட்டுகளை இயக்கி, சந்திரனின் கவர்ச்சி விசையி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மூன்று வீரர்களுடனும் பூமியை நோக்கி விரைந்தது. அது பூமியை நெருங்க நெருங்க அதன் வேகத்தை அதிலிருந்த வீரர்கள் குறைத்துக்கொண்டனர். இறுதி யில் அக்கலம் பசிபிக் கடலில் வந்து பாரஷுட்களின் உதவியால் மெல்ல இறங்கியது. இதைத் தொடர்ந்து, அப்பாலோ-12, அப்பாலோ-14, அப்பாலோ-15, அப்பாலோ-16, அப் பாலோ-17 ஆகிய விண்வெளிக்கலங்களில் அமெரிக்க விண்வெளிவீரர்கள் சந்தி ரனுக்குச் சென்று திரும்பியுள்ளனர். அப்பாலோ-15லும், அதன் பின்னும் சென்ற வீரர்கள் தங்களுடன் 'ரோவர்' ( Rover ) என்னும் ஊர்தியையும் கொண்டு சென்றனர். இதில் அவர்கள் சந்திரனின் பரப்பில் நெடுந்தூரம் பயணம் செய்து ஆய்வுகள் நடத்தினார்கள். விண்வெளிக்கலம் சந்திரனுக்குச் செல்லும்போதும் வரும்போதும், சந்திர னில் விண்வெளிவீரர்கள் தங்கியிருக்கும் போதும் அவர்கள் பூமியிலுள்ள நிலை யத்துடன் இடைவிடாது தொடர்பு கொண்டிருப்பார்கள். சக்திவாய்ந்த வானொலி, தொலைக்காட்சிச் சாதனங்கள் 36,000 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப் பட்ட பூமியின் படம். மத்திய பசிபிக் சமுத்திரப் பகுதியில் உள்ள மேகங்க ளின் அமைப்பில் ஏற்படும் மாறு தலையும் காலையி லிருந்து மாலைவரை சூரிய ஒளியினால் பூமியில் ஏற்படும் மாறுதலையும் படத்தில் வரிசையாகக் காணலாம். அமெரிக்காக் கண்டத்தின் பகுதிகள் முதல் இரு படங் களில் தெரிகின்றன.