பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
அமெரிக்க விண்வெளி வீரர்கள், விண்வெளியிலிருந்து கண்ட தென் இந்தியாவின் தோற்றம்

விண்வெளி


இதற்கு உதவுகின்றன. சந்திரனில் விண்வெளிவீரர்கள் மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தையும் பூமியிலி ருந்தே தொலைக்காட்சியில் பார்க்க முடியும். அப்பாலோ-13-ல் கோளாறு ஏற்பட்டு விண்வெளியில் திசை தவறிச் சென்றபோது, தரையிலிருந்த விஞ்ஞானி கள் தம் திறமையால் அதைப் பத்திர மாகத் தரையிறக்கினார்கள். சந்திரனில் விண்வெளி ஆய்வுக் கூடம் (Space Research Station ) ஒன்றை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதில் விஞ்ஞானிகள் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள். ரஷ்யர் கள் ஏற்கெனவே மார்ஸ்-1 என்ற விண்வெளிக்கலத்தைச் செவ்வாய்க்கும், வீனஸ்-1, வீனஸ்-2 என்ற கலங்களை வெள் ளிக்கும் செலுத்தியுள்ளனர் (1960). அமெ ரிக்கர்கள் அனுப்பிய (1962) மாரினர்-2 என்னும் கலம் வெள்ளியை 34,550 கிலோமீட்டர் தொலைவில் நெருங்கிற்று. மாரினர்-4 என்ற கலத்தை (1964) அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பியது. அது 228 நாட்களில் பூமியிலிருந்து 21.4 கோடி கிலோமீட்டர் தொலைவு சென்று, செவ்வாய்க்கு அருகிலிருந்து படம் எடுத்து அனுப்பியது. மாரினர்- 5 என்ற அமெ ரிக்கக் கலம் (1967) வெள்ளியை 3,968 கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி விஞ்ஞானத் தகவல்கள் பல வற்றை அனுப்பியது. செவ்வாய், வெள்ளி முதலிய கிரகங்களுக்கு மனிதனை அனுப் புவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் கேரளத்திலுள்ள தும்பா என்னுமிடத்தில் 1963ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. காந்த மண்டல பூமத்தியரேகைப் பகுதியில் அமைந்துள்ள ப் பயணம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஆரியபட்டா' என்ற முதல் செயற்கைக் கிரகம். இது 1975 ஏப்ரலில் விண்வெளியில் செலுத்தப்பட்டது.

தும்பா நிலையம் சர்வதேசச் சோதனை ஏவுகணை செலுத்தும் தளமாக ஐ. நா. ஆதரவில் பணியாற்றி வருகிறது. இதுவே இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள முதல் ஏவுகணைத் தளமாகும். முதன் முதலில் 1963 நவம்பர் 21-ல் நைக்-அப்பாஷி என்ற அமெரிக்க ஏவுகணை இங்கிருந்து

இந்தியாவில் கேரளத்திலுள்ள தும்பாவிலிருந்து செலுத்தப்பட்ட ஜூடி-டார்ட் ஏவுகணை