பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அமெரிக்க விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்வெளிக் கலம் பூமிக்குத் திரும்புகையில் பாரஷுட்களின் உதவியால் கடலில் மெல்ல இறங்குகிறது. அவ் வீரர்களைப் பின்னர் ஹெலிக்காப்ட்டர்களில் ஏற்றிச் செல்வார்கள்.


விண்வெளியில் செலுத்தப்பட்டது. விண் வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும் இத் துறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளும் தும்பா தளத்தைப் பயன்படுத்தி வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா என்னு மிடத்திலும் ஏவுகணைத் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்க்க : சந்திரன்; செயற்கைக் கிரகம்; ராக்கெட். விதை : வீட்டுத் தோட்டத்தில் புதிதாகச் செடி வளர்க்க விரும்பினால் அதற்கு விதை விதைக்கிறோம். சிறு செடிகளை நடுவதும் உண்டு. ஆனால் புதிய செடி தோன்றி வளர்வதற்கு அடிப்படை அதன் விதையேயாகும். நெல், கோதுமை, அவரை, மொச்சை, கடலை, எள், கொள், தேங்காய் இவை யெல்லாம் விதைகளே.தாவரங்கள் பெருகி வளருவதற்கு இந்த விதைகள் உதவுகின்றன. சில விதைகள் மனி தருக்கும், விலங்குகள், பறவைகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றன. விதையின் வெளிப்பகுதிக்கு விதை உறை (Seed coat ) என்று பெயர். விதை உறையை எடுத்துவிட்டுப் பார்த் தால் உள்ளே ஒன்று அல்லது இரண்டு பருப்புகள் இருக்கும். இவை விதை யிலைகள் (Cotyledons ) எனப்ப டும். இவற்றைப் பிரித்தால், இவற்றின் தை நடுவில் முளைக்குருத்து அல்லது கருச் செடி (Embryo) காணப்படும். இக்கருச்செடிக்குத் தேவையான உணவு, விதையிலைகளில் தாய்ச் செடியினால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில விதைகளில் கருச் செடிக்கு வேண்டிய உணவு, விதையிலைகளில் வைக்கப்படா மல், அவற்றைச் சூழத் தனியாக வைக்கப்பட்டிருக்கும். இப்பகுதிக்கு முளை சூழ்தசை (Endosperm) என்று பெயர். விதைகளில் இரண்டு பருப்பு உள்ள தாவரங்களை இரட்டை விதையிலைத் தாவரங்க ள் (Dicotyledons ) என்பர். இப் பருப்புகளிலிருந்து இரண்டு இலைகள் உண்டாகும். புளி, மா, தேக்கு முதலிய மரங்களும், அவரை, எள், கத்தரி, தக் காளி, கடுகு, சீரகம், தேயிலை, காப்பி முதலியனவும் இவ்வகையைச் சேர்ந்தவை. நெல், கோதுமை, வாழை, தென்னை முதலியவை ஒற்றை விதையிலைத் தாவ ரங்கள் (Monocotyledons ) எனப்படும். இவற்றின் விதைகளில் ஒரு பருப்புதான் இருக்கும். அதிலிருந்து ஓர் இலைதான் உண்டாகும்.

வெவ்வேறு தாவரங்களின் விதைகளில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் உணவுப்

விதை