பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகள் கலைக்களஞ்சியம்


லிவிங்ஸ்ட்டன், டேவிட் (David Livingston, 1813-1873) : ஆப்பிரிக்காக் கண்டத்தின் பெரும் பகுதி முதலில் கண்டு பிடிக்கப்படாமல் இருந்தது. அந்தக் கண்டத்திற்குச் சென்று அதன் பல பகுதிகளைக் கண்டறிந்து பெரும்புகழ் பெற்ற நாடாய்வாளர் டேவிட் லிவிங்ஸ்ட்டன்.

ஸ்காட்லாந்திலுள்ள ஒரு சிற்றூரில் லிவிங்ஸ்ட்டன் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்ததால் இவர் தமது பத்தாம் வயதிலேயே ஒரு பஞ்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். எனினும் இரவுப் பள்ளிகளில் படித்துவந்தார். பின்பு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். 1838-ல் லண்டன் சமயப் பிரசார சங்கத்தில் (London Missionary Society) இவர் சேர்ந்தார். இச்சங்கத்தினர் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப 1841-ல் இவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர்.

பல இன்னல்களும் இடையூறுகளும் குறுக்கிட்ட போதிலும் லிவிங்ஸ்ட்டன் மனவுறுதியுடன் பல பயணங்களை மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைக் கண்டறிந்தார். 1851-ல் சாம்பசி (Zambezi) ஆறு தோன்றும் இடத்தைக் கண்டுபிடித்தார். சாம்பசி ஆற்றில் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி யொன்றைக் கண்டு, அதற்கு அந்நாளில் இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் பெயரால் 'விக்டோரியா நீர்வீழ்ச்சி' என்று பெயரிட்டார்.1856ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து திரும்பினார்.

சமயப் பிரசார சங்கத்தை விட்டு விலகி, 1858-ல் மத்திய ஆப்பிரிக்காவையும், கிழக்கு ஆப்பிரிக்காவையும் ஆராய்வதற்காகச் சென்றார். செல்லும் வழியில் அராபியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமை களாக விற்பனை செய்யக் கடத்திச் செல்வதைக் கண்டார்.இக்கொடிய முறையை ஒழிக்க இவர் அரும்பாடு பட்டார்.

1873 ஆம் ஆண்டில் லிவிங்ஸ்ட்ட ன் காலமானார். இவருடைய உடலை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.


லின்கன், ஆபிரகாம் (Abraham Lincoln, 1809-1865) : அமெரிக்காவில் 1862ஆம் ஆண்டுவரை, நீக்ரோ மக்களை அடிமைகளாகச் சந்தைகளில் விற்று வந்தார்கள். தங்களை வாங்கியவர்களுக்கு அடிமை

ஆபிரகாம் லின்கன்