பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விமானந்தாங்கிக் கப்பல் - விமான நிலையம் 55


'விக்ராந்த்' என்ற இந்திய விமானந்தாங்கிக் கப்பலிலிருந்து விமானங்கள் புறப்படத் தயாராகின்றன.

விமான நிலையத்திலிருந்து கிளம்புவது போலவே விமானந்தாங்கிக் கப்பலின் மேல் தளத்திலிருந்து விமானம் தானே புறப் படும். ஆனால், இறங்கும் பொழுது, இக் கப்பலின் மேல் தளத்திற்குச் சிறிது உய ரத்தில் விமானம் மெதுவாகச் செல்லும். அப்பொழுது விமானத்தின் அடியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கொக்கி, தடுக்குங் கருவி (Arresting gear) என்னும் வடத்தில் (Cable) மாட்டிக்கொள்ளும். இவ்வடம், விமானத்தை இழுத்து நிறுத்தி விடும். மேல் தளத்திற்குக் கீழே 'தங்கும் தளம்' (Hangar deck) அமைந்திருக்கும். இதில் போர்விமானங்கள், வேவுவிமானங் கள், டார்ப்பிடோ வெடி விமானங் கள் ஆகியவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேல்தளத்தி லிருந்து இத்தளத்திற்கு விமானங்களை இறக்கவும், மீண்டும் மேலே ஏற்றவும் உயர்த்தி (த.க.) இருக்கும். தங்கும் தளத்திற்கு அடியில், விமானங்களைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலையும், விமானிகள், மற்ற ஊழியர்கள் தங்கும் அறைகளும் அமைந்திருக்கும். எரி பொருள்கள், குண்டுகள், வெடிமருந்துகள் முதலியவற்றைச் சேமித்து வைத்திருக்க வும் தனி வசதிகள் உண்டு.

ஒரு பெரிய விமானந்தாங்கிக் கப்பலில் சாதாரணமாக 100 விமானங்களும், 2,000 பேரும் தங்கியிருக்க வசதி உண்டு. பகை விமானங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, விமானந்தாங்கிக் கப்பல்களில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் (Anti-aircraft guns) பொருத்தப் பட்டிருக்கும்.விமானந்தாங்கிக் கப்பல் களைப் பகைக் கப்பல்களின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றக் காவல் கப்பல் களும் (Cruisers) நாசகாரிகளும் (Destroyers) துணையாக இருந்துவரும்.

முதல் உலக யுத்தத்தின்போது கடல் விமானங்களைத் (Sea planes) தாங்கிச் செல்லும் கப்பல்கள் உருவாயின. பிரிட்டி ஷார் 1923-ல் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலைச் செய்தனர். அமெ ரிக்கர் தங்களின் முதல் விமானந்தாங்கிக் கப்பலை 1933-ல் தயாரித்தனர். இரண் டாம் உலக யுத்தத்தின்போது, கடற் படையின் இன்றியமையாத அங்கமாக விமானந்தாங்கிக் கப்பல் அமைந்தது.

இந்தியக் கடற்படையில் 'விக்ராந்த்' என்ற விமானந்தாங்கிக் கப்பல் உள்ளது.

விமான நிலையம் ( Airport ) : விமானங்கள் வந்து இறங்கவும், நிற்கவும், கிளம்பிச் செல்லவும் வேண்டிய எல்லா வசதிகளும் கொண்ட இடம் விமான நிலையம். உலகிலுள்ள முக்கிய நகரங் களிலெல்லாம் விமான நிலையங்கள் உள்ளன. மிகப் பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விமான நிலையங்கள் உண்டு . ஒரு பகுதியில் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்தின் அளவையும், அங்கு வந்து செல்லக்கூடிய விமானங்களின் வகை யையும் பொறுத்து விமான நிலையத்தின் அளவும் வடிவமும் அமையும். ஒவ்வொரு விமான நிலையத்திலும் என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும் என்பதற் கான சர்வதேசத் திட்டத்தின்படியே விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

விமான நிலையம் பொதுவாக நகரத்திலி ருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலை வில் உயரமான மரம், குன்றுபோன்ற தடைகள் எதுவும் இல்லாத இடத்தில் அமைந்திருக்கும். விமானம் இறங்கும் போதும் உயரே கிளம்பும்போதும் அதன் முன்பகுதி காற்று வீசும் திசைக்கு எதிர்த் திசையில் இருக்கவேண்டும். அப்பொழுது தான் விமானம் பத்திரமாக இறங்கவும், மேலே எழும்பவும் முடியும். எனவே, ஓரிடத்திலுள்ள காற்றின் திசையையும் முக்கியமாகக் கருத்தில்கொண்டு விமான நிலையத்தை அமைக்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையம்


மாஸ்க்கோ விமான நிலையம்