பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விமானப்படை


இந்திய விமானப்படையைச் சேர்ந்த HF-24 என்னும்
மிகையொலி விமானம்
இமயமலைப் பகுதியில் இந்திய விமானப்படையைச்
சேர்ந்த 'ஹன்டர்' ஜெட் விமானங்கள்.


அடிப்பகுதியில் ராக்கெட்டுகளைக் கொண்ட அமெரிக்கப்
போர் விமானம். மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில்
செல்லக்கூடியது.
ஆளின்றிப் பறந்து சென்று, குண்டு வீசிவிட்டுத் திரும்பக்
கூடிய அமெரிக்க விமானம்


நடக்கும்; வானத்திலும் போர் நடக்கும். வானத்தில் போரை நடத்த உதவுவது விமானப் படையாகும். வானத்தில் போர் நடத்துவதோடன்றி, தரையிலுள்ள தரைப்படை,கடற்படை ஆகிய வற்றையும் வானிலிருந்து தாக்க விமானப்படை பயன்படுகிறது. இப் படையின் விமானங்கள் விரைந்து சென்று தாக்குதல் நடத்தி, மிக விரைவிலேயே திரும்பிவிடுகின்றன.

முதல் உலக யுத்தத்திற்குமுன் விமா னங்கள் பகை நாடுகளில் சென்று உளவு பார்ப்பதற்கு மட்டுமே பயன் பட்டு வந்தன. பின்னர், போர்க் கருவிகளைக் கொண்டு செல்ல விமா னங்கள் பயன்பட்டன. தரைப்படைக்கும் கடற்படைக்கும் உதவுவதற்கு ஏற்றவகை யில் பலவகை விமானங்களைத் தயார் செய்து, முதல் உலக யுத்தத்தின்போது பயன்படுத்தினர்.

விமானத்தை மிகச் சிறந்த போர்க் கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பது இரண்டாம் உலக யுத்தத்தின்போது தான் தெரியவந்தது. தரைப்படை, கடற்படை முதலியவற்றால் சாதிக்க முடியாத காரியங்களையும் விமானப் படையைக் கொண்டு முடிக்கலாம் என வல்லரசுகள் அறிந்தன. அதற்கேற்ற வாறு விமானங்கள் திருத்தி அமைக்கப் பட்டன. பல வகை ஜெட் விமானங்களும், ராக்கெட் விமானங்களும் உருவாயின. விமானப் பயிற்சிப் பள்ளிகள் நிறுவப் பட்டு, விமானப் போருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கால விமானப்படையில் போர் விமானம், குண்டு வீச்சு விமானம், உளவு விமானம் முதலிய பலவகை விமா


விமானப்படையைச் சேர்ந்த 'கான்பெர்ரா' விமானங்கள்.
தாஜ்மகாலையும் யமுனை ஆற்றையும் கீழே காணலாம்.