பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

னங்கள் இருக்கின்றன. விமானப்படை பல பகுதிகளாகப் பகுக்கப்பட்டு இயங்கி வருகிறது. தரைப்படையிலும், கடற் படையிலும் இருப்பது போலவே, விமா னப்படையிலும் பலதரப்பட்ட அதிகாரி கள் உள்ளனர். விமானங்களை ஓட்டு வோர், விமானத்திலிருந்து சண்டை செய்வோர், எந்திரங்களை இயக்குவோர், விமானிகளுக்குக் கருவிகளைத் தயார் செய்து கொடுப்போர் ஆகியோர் அனை வரும் விமானப்படையைச் சேர்ந்தவர் களாவர். இந்திய விமானப்படை (Indian Air Force) 1933-ல் நிறுவப்பட்ட து. இந்தியா சுதந்தரம் அடைந்தபின், இப் படையைத் திருத்தியமைத்து விரிவாக்கி யுள்ளனர். குண்டு வீச்சு விமானங்கள், வேட்டை விமானங்கள் எனப் பலவகைப் போர் விமானங்கள் இப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் 'நாட்' (Gnat) என்னும் விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றது. HF-24, MIG-21 என்னும் மிகையொலி (Supersonic) விமா னங்களும் இந்தியாவில் தயாராகின்றன. இவற்றின் வேகம் ஒலியின் வேகத்தைவிட அதிகம். இந்திய விமானப்படைக்குத் தேர்ந் தெடுக்கப்படும் வீரர்களுக்கும், அதி காரிகளுக்கும் விமானப்பயிற்சிக் கல்லூரி களிலும், பயிற்சி நிலையங்களிலும் நவீன விமானப் போர்முறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய விமானப் படை இன்று நல்ல வளர்ச்சி பெற் றுள்ளது. 1965, 1971 ஆகிய ஆண்டு களில் இந்தியா மீது பாக்கிஸ்தான் திடீர்த் தாக்குதல் தொடுத்தது. அப் போது இந்திய விமானப்படை பாக்கிஸ் தானின் படைகளை முறியடித்து வெற்றி வாகை சூடி, உலகிலுள்ள சிறந்த விமானப் படைகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. விமானம் : போக்குவரத்துச் சாத னங்களுள் மிக விரைவாகச் செல்லக் கூடியது விமானம்.


பறவைகளைப் பார்த்து மனிதன் தானும் அவ்வாறு வானில் பறந்து செல்ல ஆர்வங்கொண்டான். பெரிய பெரிய இறக்கைகளைச் செய்து அவற்றை முதுகில் கட்டிக்கொண்டு அவற்றை ஆட்டி ஆட்டிப் பறக்கவும் சிலர் முயன்றனர். காற்றைவிட இலேசான பொருள் காற்றில் மிதக்கும் அல்லவா? இதையறிந்த விஞ்ஞானிகள் ஹைடி ரஜன், ஹீலியம் வாயுக்களைப் பெரிய பலூன்களில் நிரப்பிப் பறக்கவிட்டார்கள். சிலர் அதில் ஏறிச் சென்று விரும்பிய திசை யில் சென்றுவந்ததும் உண்டு. இவற் றுக்கு ' ஆகாயக் கப்பல்கள் ' (த.க.) என்று பெயர். விமானங்கள் அமைக்கப் பட்டதும் இவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இறக்கைகளின் தத்துவத்தை உணர்ந்த விஞ்ஞானிகள், அசைவற்று, நன்கு உறுதியாகப் பொருத்தப்பட்ட இறக்கைகளை உடைய விமானங்களை அமைத்துப் பறக்க முயன்றனர். ஜெர் மனியைச் சேர்ந்த ஆட்டோ லீலியந்தால் (Otto Lilienthal), அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டேவ் ஷனூட் (Octave Chanute) முதலியோர் இத்தகைய விமானங்களை அமைத்துப் பறந்து காட்டினர். விமானத்தில் மனிதன் ஏறிச் சென்று, அதை ஆகாயத்தில் வேண்டியவாறு செலுத்தலாம் என்பதை முதன் முதலில் காட்டியவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் (த.க.) ஆவர். 1903 டிசம்பர் 17-ல் மரச் சட்டத்தில் அமைத்த விமானத்தில் ஆர்வில் ரைட் ஆகாயத்தில் கிளம்பி 12 வினாடிகளில் 36 மீட்டர் (120 அடி) தொலைவு பறந்து காட்டினார். தொடர்ந்து சிலர் இத்தகைய விமானங்களை அமைத்தனர். தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மரச்சட்டத்தினால் அமைந்த வை; அளவில் சிறியவை; அவற்றில் ஓரிருவரே அமர்ந்து செல்லலாம். இன்றைய விமானங்கள், அலுமினியம், தாமிரம், மாங்கனீஸ், மக்னீசியம் ஆகிய உலோகங்கள் கலந்து டியூராலுமினம்

விமானத்தினுள் பயணிகள் பகுதி