பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அஞ்சல் செய்யப்படுகின்றன. நிலநடுக்கம், வெள்ளம் முதலியவற்றால் பாதிக்கப் பட்டுத் தனியே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மிக விரைவில் உணவு, மருந்து முதலிய பொருள்களை விமா னத்தில் கொண்டு சென்று பாரஷூட் களின் (த.க.) மூலம் இறக்குவார்கள். மிகப் பெரிய வயல்களில் பூச்சிமருந்துகள் தெளிப்பதற்கும் சிறு விமானங்கள் பயன் படுகின்றன. இன்று இந்தியாவிலே பலவகை விமா னங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெங்க ளூரில் போக்குவரத்து விமானங்கள், ஹெலிக்காப்ட்டர்கள், அவற்றுக்கான எஞ்சின்கள்; நாசிக் என்னுமிடத்தில் ராணுவ விமானங்கள் ; கான்புரியில் பயணிகள்-சரக்குகள் போக்குவரத்துக் கான விமானங்கள் ; ஐதராபாத்தில் விமானங்களுக்குத் தேவைப்படும் நுட்ப மான மின்கருவிகள், ரேடியோ-ராடார் சாதனங்கள்; லட்சுமணபுரியில் விமா னங்கள்-ஹெலிக்காப்ட்டர்களுக்கான பல உறுப்புகள்; கோராப்புட் என்னுமிடத்தில் விமான எஞ்சின்கள் தயாரிக்கப்படு கின்றன. வியட்நாம் : தென்கிழக்கு ஆசியா விலுள்ள நாடு வியட்நாம்.. வடக்கில் சீனாவும் மேற்கில் லாவோஸ், கம்போ டியா நாடுகளும் தெற்கிலும் கிழக்கி லும் தென் சீனக் கடலும் இதன் எல்லை கள். இந்நாடு, வட வியட்நாம், தென் வியட்நாம் என இரு சுதந்தர நாடு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட வியட்நாமின் பரப்பு 1,44,100 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 2,13,40,000 (1969). தலைநகர் ஹானாய். தென் வியட்நாமின் பரப்பு 1,73,800 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 1,73,33,000(1970). தலைநகர் சைகான். வட வியட்நாமின் வட பாகத்தில் சிவப்பாறு (Red River) பாய்கிறது. இதன் கிழக்குப்பகுதி செழிப்பானது. நாட்டின் மற்றப்பகுதிகள் மலைப்பாங்கா னவை. தென் வியட்நாமின் தென் பாகத்தில் மேக்காங் ஆறு (Mekong) பாய்வதால் செழிப்பான கழிமுகப்பகுதி ஏற்பட்டுள்ளது. வியட்நாமில் வேளாண்மையே முக்கியத் தொழில். கழிமுகப் பகுதிகளில் நெல் விளைகிறது. கரும்பு, புகையிலை, பருத்தி முதலியன மற்ற விளைபொருள் கள். பீடபூமிப் பகுதிகளில் காப்பி, தேயிலை முதலியன விளைகின்றன. தென் வியட்நாமில் ரப்பர் பெருமளவில் பயிரிடப்படுகிறது. அரிசியும் மீனுமே நாம் வியட்நாம் மக்களின் முக்கிய உணவு. மீன் பிடித்தல் மக்களின் முக்கியத் தொழிலாகும். மக்களுள் பெரும்பாலோர் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். இந்நாட்டில் வியட்நாமிய மொழி வழங்குகிறது.

வட வியட்நாமில் கனி வளம் மிகுதி. நிலக்கரி, இரும்பு, பாஸ்வரம் முதலியன இங்கு வெட்டியெடுக்கப்படுகின்றன. இரு நாடுகளிலும் இரும்பு எஃகு ஆலைகளும் துணி, சர்க்கரை, ரசாயன உரம் முதலிய தொழிற்சாலைகளும் உள்ளன. எனினும் இடைவிடாத போர்களினால் இரு நாடு களிலுமே பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்றும் ஒரே நாடாக இணைந் திருந்தன. இந்தோ -சீனா என்று அதற்குப் பெயர். பிரான்ஸ் அந்நாட்டை ஆண்டு வந்தது. யுத்தத்தின்போது இந்தோ-சீனா ஜப்பானுக்கு அடிமையாகியது. யுத்தத் திற்குப் பிறகு பிரான்ஸ் அந்நாட்டை மீட்க முயலுகையில் வியட் மின் (Viet Minh) என்னும் பொதுவுடைமைக் கட்சி யினர் எதிர்த்துப் போரிட்டனர். சுமார் எட்டு ஆண்டுகள் போர் நடந்த பிறகு, 1954-ல் வியட்நாமை வட வியட்நாம், தென் வியட்நாம் என இரு பகுதிக ளாகப் பிரிக்க பிரான்ஸ் உடன்பட்டது. லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளும் யுத்தத்திற்குப் பிறகு சுதந்தரம் பெற்றன. எனினும் வட வியட்நாமுக்கும் தென் வியட்நாமுக்குமிடையே பிறகு போர் மூண்டது. தென் வியட்நாமுக்கு அமெ ரிக்காவும் வட வியட்நாமுக்குப் பொது வுடைமை நாடுகளும் ஆதரவு அளித்தன.

வியட்நாம்