பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விவேகாநந்தர்


பழக்கி அதன் குணங்களையெல்லாம் படிப் படியாக மாற்றிவிட்டான். இதுபோலவே, அதிகமாகப் பால் கொடுக்கும் பசு, அதிக இறைச்சி கொடுக்கும் பன்றி, மிக வேகமாக ஓடும் குதிரை முதலியன மனிதன் உருவாக்கிய புதிய இனங்க ளாகும். முக்கியமான விலங்குகள் பற்றித் தனிக் கட்டுரைகள் உள்ளன. பார்க்க : விலங்கியல் ; விலங்குக்காட்சிசாலை. விவேகாநந்தர் (1863-1902): இராமகிருஷ்ண பரமஹம்சரின் (த.க.) சீடர்களுள் முதன்மையானவர் விவேகா நந்தர். தமது குருவின் அருளால் இவரும் சிறந்த ஞானியாக விளங்கினார். இவர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற் பெயர் நரேந்திர நாத தத்தர். இவரது தந்தையின் பெயர் விசுவநாத தத்தர். தாயின் பெயர் புவனேசுவரி. நரேந்திரர் ஆங்கிலக் கல்வி பயின்று கல்லூரிப் பட்டம் பெற்றார். ஆங்கி லத்திலும், வடமொழியிலும் உள்ள பல நூல்களை நன்கு கற்றார். பின்னர், 'கடவுள் ஒருவரே; அவர் அன்பு உரு வானவர்' என்னும் கொள்கையைப் பரப்பிவந்த பிரம சமாஜத்தில் சேர்ந் தார். இளமையிலேயே இவர் அறிவாற் றலும் தியானம் செய்யும் பழக்கமும் உடையவராக இருந்தார். இராமகிருஷ்ண பரமஹம்சரை முதன் முதல் சந்தித்த போதே அவர்பால் ஈர்க்கப்பட்டார். உலக மக்களை உய்விக்கவும், அவர்க ளுக்குத் தொண்டு செய்யவுமே தாம் பிறந்திருப்பதாக குருவின் அருளால் நரேந்திரர் உணர்ந்தார். குருவின் ஆணை யைப் பெற்றுத் துறவியாகி 'விவேகா நந்தர்' என்னும் பெயர் பூண்டார். இமயம் முதல் குமரி வரை நடந்தே பயணம் செய்து, குருநாதரின் செய்தியைப் பரப்பினார். கன்னியாகுமரிக்குச் சென்ற போது அங்குக் கடற்கரைக்குச் சிறிது தொலைவில் கடலில் உள்ள ஒரு பாறைக்கு நீந்திச் சென்று, அதில் அமர்ந்து பாரதத் தாயை நினைந்து தியானம் செய்தார். அங்கிருந்து விவேகாநந்தர் சென்னை வந்து சேர்ந்தார். அமெரிக்காவில் நடை பெறவிருந்த சர்வ சமய மகாசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு விவேகா நந்தரை நண்பர்கள் கேட்டுக்கொண்ட னர். அவர்களின் விருப்பத்திற்கு இசைந்து விவேகாநந்தர் அமெரிக்கா சென்று சர்வ சமய மகாசபையில் கலந்துகொண்டு சிறந்ததொரு சொற் பொழிவாற்றினார். அதன்மூலமாக அவர்

விவேகாநந்தர்

விவேகாநந்தர் புகழ் உலகெங்கும் பரவியது. பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடு களிலும் பல இடங்களில் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். இதன் மூலம் இந்து மதத்தின் சிறப்புகளை உலகறியச் செய்தார். இந்தியா திரும் பியபோது சென்னையில் இவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகாநந்தர் மீண்டும் ஒருமுறை மேலைநாடுகளுக்குச் சென்றார். இந்தியா விலும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இவரது சீடர்களின் எண் ணிக்கை பெருகியது. இந்தியா திரும் பிய விவேகாநந்தர் 1897ஆம் ஆண்டில் இராமகிருஷ்ணரின் பெயரில் ஒரு சங்கம் நிறுவி, மக்களின் வறுமைப் பிணியை நீக்கும் தொண்டில் ஈடுபட்டார். 1898-ல் கல்கத்தா அருகே பேலூர் மடத்தை நிறு வினார். விவேகாநந்தர் தம்மை மறந்து தியா னத்தில் ஆழ்ந்துவிடுவார். மன உறுதி, தெளிவு, முன்னறிவு, அமைதி, புல னடக்கம் எல்லாம் ஒருங்கே பெற்ற சிறந்த ஞானியாக விளங்கினார் விவேகா நந்தர். 39 ஆண்டுகளே வாழ்ந்த குறுகிய காலத்தில் இவர் அழியாத புகழும் ஆற்றலும் பெற்று விளங்கினார். இவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களும் அருள்மொழிகளும் எண்ணிலடங்கா. விவேகாநந்தர் கன்னியாகுமரிக்கருகில் தியானம் செய்த பாறையின் மீது நினைவுச்சின்னமாக அழகிய மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. இது சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது.