பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வீணை


விஷ்ணு

விஷ்ணு

இந்தியா முழுவதும் விஷ்ணு கோயில் கள் உள்ளன. இக்கோயில்களில், விஷ்ணுவின் மூர்த்தம், நின்ற திருக் கோலம், வீற்றிருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் ஆகிய மூன்று நிலை களில் அமைந்திருக்கின்றது. எடுத்துக் காட்டாக, திருப்பதியில் நின்ற திருக் கோலத்திலும், திருவரகுணமங்கையில் வீற்றிருந்த திருக்கோலத்திலும், திரு நீர்மலையில் கிடந்த திருக்கோலத்திலும் விஷ்ணு காட்சியளிக்கின்றார்.

விஷ்ணுவின் பெருமைகளையும், அவ ருடைய அவதாரச் சிறப்புகளையும் ஆழ் வார்கள் (த.க.) தம் பாடல்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.

வீணை: இசைக் கருவிகளில் சிறந்தது வீணை. இதன் பெருமையை உணர்ந்து தான் கலைமகள் வீணையைக் கரத்தில் ஏந்தி யிருப்பதாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதைப் பல இடங்களில் உள்ள சிறந்த சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காணலாம். இது நரம்புக் கருவி வகையைச் சேர்ந்தது.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் வழங்கிய யாழ் என்னும் கருவி தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீணையாக வளர்ச்சி பெற்றது. இன் றுள்ளது போன்ற வீணை முதன்முதலில் 17ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் உருவாக்கப் பட்டது. அப் போது தஞ்சாவூரில் அரசாண்டவர் இரகு நாத மன்னர் என்பவர். ஆகையால் இதை 'இரகுநாத வீணை' என்று சொல்வார்கள்.

உலோகத்தாலான கம்பிகளே வீணை யில் பயன்படுகின்றன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை விரல்களால் தந்தியை மெட்டுகளின் மீது அழுத்தி வாசிப்பார்கள். வாசிப்பவருக்கு வலப் புறம் உள்ளது குடம். மறுபுறம் இருப்பது கழுத்துப் பகுதி. இரண்டையும் இணைப்பது 'தண்டி' எனப்படும். தண்டி யின்மேல் மெழுகுச் சட்டம் இருக்கும். இந்த மெழுகில் வெள்ளி, வெண்கலம் அல்லது வேறு உலோகக் கலவையாலான 24 மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். வாசிப்பதற்கு மெட்டுகளின்மேல் நான்கு தந்திகள் உண்டு. பக்கவாட்டில் உள்ள மூன்று தந்திகள் தாளத்திற்கும் சுரு திக்கும் பயன்படுகின்றன. தந்திகளை முடுக்குவதற்காக மொத்தம் ஏழு பிரடை கள் இருக்கும்.

வலக்கை ஆள்காட்டி விரல், நடு விரல் இவற்றால் தந்திகளை மீட்டுவார்கள். சுண்டு விரலால் தாளத் தந்திகளை மேல் நோக்கி மீட்டுவார்கள். இடக்கை ஆட் காட்டி விரல், நடுவிரல் இவற்றால் தந்திகளை மெட்டுகளின் மீது அழுத்தி வீணை வாசிப்பார்கள்.

இராகங்களை மிக நுட்பமாகவும் அழ காகவும் இசைப்பதற்கும், இசைத் தத்து வங்களையும் நுணுக்கங்களையும் தெளி வாக விளக்குவதற்கும் வீணை சிறந்த இசைக் கருவியாகும்.

வீணை பெரும்பாலும் பலா மரத் தினால் செய்யப்படுகிறது. ஒரே மரத் துண்டிலிருந்து குடத்தையும் தண்டி யையும் குடைந்து செய்யப்படும் வீணைக்கு 'ஏகாண்ட வீணை' என்று பெயர். ஆனால் குடம், தண்டி இவற்றைத் தனித்தனி யாகச் செய்தே இணைப்பது பெரும் பான்மையான வழக்கமாகும். தந்தத் திலும் மான் கொம்பிலும் சித்திர வேலைப்பாடுகள் செய்து வீணையை அழகு படுத்துவதுண்டு. வீணையின் சிறப்பை நன்குணர்ந்து வெளிநாட்டினரும் இதைப் போற்றுகின்றனர்.

வீணை