பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெங்காயம் - வெசூவியஸ் 71

அப்பொழுது அப் பனிக்கட்டி. தன்னுடைய கனத்தினாலோ, நில அதிர்ச்சி அல்லது இடியோசையினால் உண்டாகும் அதிர்ச்சியினாலோ மெல்ல நகர்ந்து செல்லத் தொடங்கும். இவ்வாறு நகர்ந்து செல்லும் பனிக்கட்டியைப் ' பனியாறு' (த.க.) என்பர். சில சமயங்களில் அப் பனிக் கட்டி மிகுந்த வேகத்தில் மலையிலிருந்து சரிந்து விழும். இவ்வாறு விழும் பனிக்கட் டிக்கு 'வீழ்பனிப்பாறை' என்று பெயர்.

வீழ்பனிப்பாறையாக விழும் பனிக் கட்டியுடன் மண், கூழாங்கல், பெரும் பாறை முதலியனவும் கலந்திருக்கும். வீழ்பனிப்பாறை சரிந்து விழும்பொழுது பீரங்கி வெடிப்பதுபோல் பயங்கர ஓசை உண்டாகும்;அதன் வழியிலிருக்கும் மரங்கள், கட்டடங்கள் முதலியவை அழிந்துவிடும்.

பெரும்பாலான வீழ்பனிப்பாறைகள் செங்குத்தான மலைகளின் உச்சியிலிருந்தே விழுகின்றன. மலையில் உறைந்திருக்கும் பனிக்கட்டி, இளவேனில் காலத்தில் உருகத் தொடங்கும். எனவே, இக்காலத் தில்தான் வீழ்பனிப்பாறைகள் அதிக மாக விழுகின்றன. இப்பாறைகள் மிகவும் கனமாக இருக்கும். சிலவற்றின் எடை இரண்டு லட்சம் டன் வரை இருக்கும். வீழ்பனிப்பாறைகள் சிலசமயம் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சரியும். இதனால், மலைகளின் அடிவாரங்களில் வாழும் மக்களுக்கு அடிக்கடி ஆபத்து ஏற்படுகின்றது. வீழ்பனிப் பாறைகள் திடீரென்று உண்டாவதால், அதை முன்னதாக அறிந்து தப்ப முடிவதில்லை.

வெங்காயம் : உணவுப்பொருள் களுக்கு மணமும் சுவையும் கொடுப்ப தற்காக வெங்காயத்தைச் சேர்க்கிறோம். சில நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருந்துப் பொருள்கள் வெங்காயத்தில் உள்ளன என்றும் சிலவகைக் கிருமிகளை அழிக்கும் வல்லமை வெங்காயத்திற்கு உண்டு எனவும் கூறுவர்.

வெங்காயம் ஒற்றை விதையிலைத் தாவரம். இது புல் குடும்பத்தைச் சேர்ந் தது. அடிப்பகுதியில் தட்டையான தகடு போலிருப்பது தான் இதன் தண்டு. இதிலிருந்து கிளம்பும் இலைகள், ஒன்றை யொன்று பொதிந்துகொண்டு, கிழங்கு போல் உருண்டு திரண்டிருக்கும். இப் பாகத்திற்குப் பூடு (Bulb) என்று பெயர்.

வெங்காயத்தில் இருவகை உண்டு. ஒன்று, பெரியதாக, ஒரே பூடாக இருக்கும். இதற்குப் பெரிய வெங்காயம் என்று பெயர். மற்றொன்று, சிறியதாக, பல பூடுகள் சேர்ந்த கொத்தாக இருக்கும்.

இதற்குச் சிறிய வெங்காயம் என்று பெயர். பெரிய வெங்காயத்தைக் காட்டிலும் சிறிய வெங்காயம் அதிகக் காரமுடையது. வெங் காயத்தின் மேல்பகுதி சிவப்பாகவும் உட் பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வெங்காயம் மிகுதியாகப் பயிர் செய்யப் படுகிறது. பெரிய வெங்காயத்தை நட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு பூக் கொத்துகள் தோன்றும். இவை முதிர்ந்து வெங்காய விதை கொடுக்கும். விதையை நாற்றுப் பாவி, நட்டு, வெங்காயப் பூடு விளைவிப்பார்கள். சிறிய வெங்காயத்தைப் பயிரிடும் முறை வேறு. இது கொத்துக் கொத்தாக இருப்பதால், ஒவ்வொன்றை யும் தனித்தனியாகப் பிரித்து , ஒற்றைப் பூடாக நட்டுப் பயிர்செய் வார்கள்.

வெங்காயத்தைச் சமைப்பதுடன் பச்சையாகவும் பயன்படுத்துவது உண்டு. இதில் கார குணமுடைய சாறு உள்ளது. வெங்காயத்தை உரிக்கும்போது இச் சாற்றின் துளிகள் தெறித்துக் கண்ணில் விழுந்தால் கண்ணில் எரிச்சல் உண் டாகும். வெங்காயச்சாறு பயன் மிக்கது. இச்சாற்றைப் பிழிந்து, சர்க் கரை சேர்த்து மூல நோய்க்கு மருந்தாக உண்பர். வெங்காயம் சீரணத்தை ஊக்கு விக்கும்; இரத்தத்தைத் தூய்மையாக்கும்; நஞ்சை முறிக்கும். வாதம், காமாலை முதலிய நோய்கள் ஏற்படாவண்ணம் பாதுகாக்க வல்லது வெங்காயம்.

வெசூவியஸ் : உலகிலுள்ள எரிமலை களுள் குறிப்பிடத்தக்கது வெசூவியஸ். இது இத்தாலியில் நேப்பிள்ஸ் விரி குடாவின் கரையில் அமைந்துள்ளது. இதன் கூம்பிலிருந்து கரும்புகை வெளிப் பட்டுப் பரவிச் செல்வதைச் சாதாரண மாக எப்போதும் பார்க்கலாம்.

வெசூவியஸ் எரிமலையின் உயரம் சுமார் 1,170 மீட்டர். ஆனால் ஒவ்வொரு முறையும் எரிமலை வெடிக்கும்போது எரிமலைக் குழம்பு, சாம்பல் முதலியன மேலும் மேலும் படிந்து இறுகுவதால் இதன் உயரம் வேறுபடும். இந்த எரிமலை முற்காலத்தில் நேப்பிள்ஸ் விரிகுடாவில் ஒரு தீவுபோல அமைந்திருந்தது. எரி மலையிலிருந்து வெளிப்பட்ட குழம்பும் சாம்பலும் இதனை விரிகுடாவின் கரை யுடன் இணைத்துவிட்டன.

எரிமலை வெடிக்கும்போது இதன் அருகிலுள்ள பகுதிகளுக்கு அழிவு ஏற்படுவதுண்டு. சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு இம் மலை வெடித்தபோது புகழ் பெற்ற நகரங்களான பாம்ப்பியை (Pompeii),